சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை 322-ஐ ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்தில் தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் புதிய நியமனம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய சங்க பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மரிய ஜான் ரோஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் காமராஜ், ஜோதி, அருண், ஜோன்ஸ் எட்வர்ட் ஞானராஜ், தங்கதுரை, பாலகிருஷ்ணன், சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story