சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம்
x

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெற கோரியும், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று வாகன நிறுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை 15 நிமிடங்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து கழக சங்க பொதுச்செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கோரிக்கை அட்டைகளுடன் தங்களது வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.


Next Story