கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை சாலையோரம் வீசி செல்லும் பொதுமக்கள்


கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை சாலையோரம் வீசி செல்லும் பொதுமக்கள்
x

கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் பொதுமக்கள் வீசி செல்கின்றனர்.

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ந்தேதி, மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இறுதியாக இது கலவரத்தில் முடிந்தது.

இந்த கலவரத்தின் போது, பள்ளிக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த மேஜை, இருக்கைகள், ஏசி எந்திரங்கள், மின் விசிறிகள், ஏர் கூலர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தூக்கிச் சென்றனர்.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்தும் சூறையாடி, அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றனர். அதோடு மட்டுமின்றி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் ஓட்டி சென்றனர்.

இதனை தொடர்ந்து,கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் அந்த பொருட்களை வைத்திருப்பவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் பொதுமக்கள் வீசி செல்கின்றனர். இதனால் கனியாமூர் பகுதியில் மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.


Next Story