முனீஸ்வரன் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் சாலைமறியல்


முனீஸ்வரன் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் சாலைமறியல்
x

செய்யாறில் அனுமதியின்றி வைக்கப்பட்ட முனீஸ்வரன் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் அனுமதியின்றி வைக்கப்பட்ட முனீஸ்வரன் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிலை அகற்றம்

செய்யாறு புறவழிச்சாலையின் ஓரமாக அரசு புறம்போக்கு இடத்தில் நேற்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த சிலர் எவ்வித அனுமதியும் இன்றி 3 அடி உயரத்தில் மேடை அமைத்து சுமார் 3 அடி உயரம் கொண்ட முனீஸ்வரன் சாமி கற்சிலையை நிறுவி பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு தாசில்தார் க.சுமதி தலைமையிலான வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று சிலையை அகற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

சாலை மறியல்

இதனை அறிந்த அப்பகுதி 2-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கெஜலட்சுமி சந்துரு தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அகற்றப்பட்ட சிலையை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்கக்கோரி செய்யாறு - ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு முதலே சாலை மறியல் ஈடுபட்டதால் போலீசார் அச்சாலையில் வந்த வாகனங்களை வேறு பாதை வழியாக திருப்பி அனுப்பி போக்குவரத்தை மாற்றம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அகற்றப்பட்ட சிலையை வருவாய் துறையினரிடம் இருந்து பெற்று தருவதாக உறுதியளித்தார். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story