குடிமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

குடிமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடிமனை பட்டா வழங்க கோரி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள 750 பெண்கள், 250 ஆண்கள் உள்ளிட்டவர்கள் ஊர்வலமாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அரசு புறம்போக்கு, வாரி புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள், மேய்ச்சல் தரிசு நிலங்கள் போன்ற எண்ணற்ற நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை பட்டா வழங்காததை கண்டித்தும், அந்த வகை நிலங்களை வகை மாற்றம் செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கு, பட்டா வழங்கு என கோஷங்களை எழுப்பி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வருவாய்த்துறையினரை வலியுறுத்தினர். மேலும் புஞ்சை, நஞ்சை தரிசு நிலங்களை பல காலமாக உழுது பயிர் செய்கின்ற விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க கோரியும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமை தாங்கினார். அப்போது கந்தர்வகோட்டை தாசில்தாரிடம் குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்ட தாசில்தார் சட்டத்திற்கு உட்பட்டு அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story