பவானி, அந்தியூரில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு; ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்


பவானி, அந்தியூரில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

பவானி, அந்தியூரில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பவானி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி புனித வெள்ளியான நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களால் சிலுவை பாதை வழிபாடு நடந்தது.

பவானி சி.எஸ்.ஐ. கிறிஸ்துவநாதர் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது பேசிய 7 வார்த்தைகள் குறித்த தியான கூட்டம் போதகர் ராஜ் தலைமையில் நடந்தது. இதேபோல் லவ் ஆப் காட் திருச்சபையில் போதகர் செல்வினும், ஜம்பை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தின் போதகர் கபில் மற்றும் கிறிஸ்து சபை, அசம்பிளி ஆப் காட், ஏஜி சர்ச், புனித பவானி அன்னை தேவாலயம், ஊராட்சி கோட்டையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம், புனித அமலஅன்னை ஆலயம் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட தேவ ஆலயங்களில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.

நகலூர்

இதேபோல் அந்தியூர் அருகே நகலூரில் உள்ள புனித செபாஸ்தியார் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் பங்குத்தந்தை அமலா தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சிலுவையை சுமந்து கொண்டும், கிறிஸ்தவ பாடல் பாடிக் கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய சிலுவை பாதை ஊர்வலம் 9 மணி அளவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு மாலை 3 மணி முதல் 6 மணி வரை பங்குதந்தை அமல தாஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் மைக்கேல்பாளையம் புனித மைக்கேல் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலமும், அந்தியூர், அத்தாணி, புதுப்பாளையம், சங்கராபாளையம், பர்கூர், ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story