சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்


சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிசங்கர், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் வரவேற்றார். மன்ற பொருள் சார்ந்த தீர்மானங்களை ஒன்றிய உதவியாளர் திருவேங்கடம் வாசித்தார்.

கூட்டத்தில் ராயப்பனூர் ஊராட்சி அம்மன்நகர் பழத்தோட்டம் அருகில் ரூ.6 லட்சத்தில் கழிவுநீர் கால்வாயுடன் சிமெண்டு சாலை அமைப்பது, பாண்டியன்குப்பம் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலும், நாககுப்பம் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவது, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு குடிநீர் வசதியுடன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை நிதி திட்டம் செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர்கள் ராஜசேகர், சித்ரா, மாவட்ட குழு உறுப்பினர் கலையரசி சந்திரசேகர், ராஜசேகர், சுதாமணிகண்டன் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story