சின்னமனூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் ஜன்னலை உடைத்து திருட்டு


சின்னமனூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் ஜன்னலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

சின்னமனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்பாண்டி (வயது 70). பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலாளர். இவரது மகள் பிரியா. இவர் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் வேல்பாண்டி, பிரியாவை பார்ப்பதற்காக பெங்களூருவுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சின்னமனூருக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அதில் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் தங்க நாணயங்கள், வெள்ளி பொருட்கள், டி.வி., கியாஸ் சிலிண்டர் உள்ளிடவை திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் சின்னமனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story