மிளகாய் சண்டி யாகம்
மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த யாக குண்டத்தில் சேலைகள், மஞ்சள், குங்குமம், திருநீறு உள்பட பல்வேறு மூலிகைகள், பழங்கள் போடப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story