பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும்


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும் அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரானா நோய்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட பணிக்குழு கூட்டம் மற்றும் குழந்தை நல குழுவின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர் பாலசுந்தர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 151 குடும்பங்களில் 300 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்துள்ளார்கள். இவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் பொருட்டு குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள பணிக்குழு ஏற்படுத்தி குழந்தைகளை கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து கல்வி தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும். இக்குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கவும், உதவித்தொகை பெறாத குழந்தைகளை கண்டறிந்து வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா நோய்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட கள ஆய்வு பணிகள் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்திட வேண்டும் என்றார் கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ராஜா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story