சந்திரயான்-3 வெற்றி ஆழ்கடலில் இறங்கி வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள்
சென்னை
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த காரபாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் தருண் ஸ்ரீ. ஆழ்கடல் பயிற்சியாளர். இவர் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஆழ்கடலில் இறங்கி தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதனை படைத்தது. இதை வரவேற்று, இந்திய விஞ்ஞானிகளை பாராட்டும் வகையில் பள்ளி மாணவர்கள் கீர்த்தனா, நிஸ்வீக், தாரகை, ஜான் ஆகிய 4 குழந்தைகளுடன் அரவிந்த் 10 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டர் போன்று தயாரித்து, தேசியக்கொடியுடன் சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கடலில் 45 அடி ஆழத்துக்கு இறங்கினார். விக்ரம் லேண்டர் மாதிரியை கடலுக்கு அடியில் வைத்தும், விக்ரம் லேண்டருடன் சந்திரயான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்து சென்ற புகைப்படத்துடனும் விஞ்ஞானிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story