குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லுார் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 'போக்சோ' மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார்.புளியங்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் செல்வ மாணிக்கம், சமூக சேவகர் தங்கராஜா, 181 மைய நிர்வாகி ஜெய ராணி, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டிக்சன் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், 181 சேவைகள் போக்சோ சட்டம் 2012, பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. முடிவில் சமூக சேவகர் தங்கராஜா நன்றி கூறினார். தொடர்ந்து அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி காவியப் பிரியாவை முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர் .ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக நல மையம், குழந்தைகள் நல அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.



Next Story