விஷ பவுடரை தின்ற குழந்தை சாவு
கிருஷ்ணகிரி அருகே விஷ பவுடரை தின்ற ௨ வயது குழந்தை இறந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தாலுகா பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் இந்துமதி (வயது 2). நேற்று முன்தினம் குழந்தை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த விஷ பவுடரை (சாணிபவுடர்) எடுத்து குழந்தை தின்றுள்ளது. இதில் மயங்கி விழுந்த குழந்தையை குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story