ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி, அண்ணா சாலை, ஹால்டா சந்திப்பில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story