கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பீலே கால்பந்தாட்டத்தின் அரசன் மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமின்றி, மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர்.

பிளக் பியர்ல் (BlackPearl) எப்போதும் எல்லா வகையிலும் விளையாட்டின் சின்னமாக இருக்கும். பீலே மறக்க முடியாத ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story