சீர்காழி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


சீர்காழி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x

சீர்காழி ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை,

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

இதில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார். ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.

சுமார் 4 மணி நேர பயணத்திற்குபின் 8.15 மணியளவில் சீர்காழி ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கினார். சீர்காழி ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இன்று இரவு அங்கேயே தங்குகிறார்.

நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.


Next Story