பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Feb 2024 11:56 AM IST (Updated: 18 Feb 2024 12:02 PM IST)
t-max-icont-min-icon

காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க . ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி,

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

மேலும் ஈரோடு, தூத்துக்குடி, கோபி, சத்தி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் .

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 80 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.


Next Story