தேசிய வில்வித்தை போட்டியில் அசத்திய சிறுமியை வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தேசிய வில்வித்தை போட்டியில் அசத்திய சிறுமியை வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 July 2022 4:06 PM IST (Updated: 11 July 2022 4:07 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற கவிநயா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

சென்னை:

சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் ராஜாகிருஷ்ணன், ஐ.டி., ஊழியர். இவரது மகள் கவிநயா (வயது 8) 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே வில்வித்தையில் பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. அதில் 9 வயதிற்கு உட்பட்ட கலந்து கொண்ட கவிநயா தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், குழு பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார்.

இந்நிலையில் பதக்கம் வென்ற சிறுமி கவிநயா தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


Next Story