முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஓரிரு நாளில் முதல்-அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஓரிரு நாளில் முதல்-அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை, விமான நிலையத்தில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது, இந்தியாவில் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கேரள வழிகளான 13 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு பதிவாகவில்லை. நோய் கண்டறிவதற்கான ஆய்வகம் சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


Next Story