கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அரியலூர்,
தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
அதன்படி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தற்போது கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேடு என்ற இடத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேடு அகழாய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாளிகை மேடு அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் குறித்தும் தொல்லியல் துறையினர் முதல்-அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தங்கம்.தென்னரசு, தொல்.திருமாவளவன் எம்.பி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.