"தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க..." - வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க... - வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

2021-ம் ஆண்டு புதியதாக பொறுபேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதி அன்று 'தமிழ்நாடு நாள் விழா' கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு, தற்போது ஜூலை 18 ஆம் தேதி 'தமிழ்நாடு நாள் விழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு என பெயர் சூட்ட முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க... களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க... உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க... ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க.." என்று கூறி அவர் முடிக்கிறார்.




Next Story