சதுரங்க போட்டி விழிப்புணர்வு பேரணி


சதுரங்க போட்டி விழிப்புணர்வு பேரணி
x

தென்காசியில் சதுரங்க போட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி சர்வதேச அளவிலான 44-வது ஆண்டு ஒலிம்பியா சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 2000 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அறிவு சார்ந்த இந்த சதுரங்க போட்டியில், தமிழகத்தின் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் வகையில், பள்ளிகளுக்கு இடையே சதுரங்க போட்டிகள் நடத்தி, மாவட்டத்திற்கு 8 பேர் என தேர்வு செய்து இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டி வருகிற 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சதுரங்க போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேற்று தென்காசி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story