செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று
x

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கு பெறும் 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செஸ் காய்கள் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கு பெறும் கலைக்குழுவை சேர்ந்த 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ள 900 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story