செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: மேடையில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள்..!!


செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: மேடையில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள்..!!
x

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் தொடக்கமாக, பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சென்னை,

95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று கோலாகல கலைநிகழ்ச்சியுடன் மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவின் தொடக்கமாக, பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் மேடையில் முன்னாள் முதல்-அமைச்சர்களான ராஜாஜி, காமராஜர், அறிஞர் அண்னா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காட்சிப்படுத்தப்பட்டன. விழாவில் கருப்பு நிற உடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.


Next Story