மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி


மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி
x

அதியமான்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடைபெற்றது.

தர்மபுரி

நல்லம்பள்ளி

பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முத்துகுமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story