தாயாரை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை; சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


தாயாரை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை; சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

சென்னை அருகே தாயை குத்தி கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை

சென்னை அயனாவரம் நாகேஸ்வர குருசாமி சந்து பகுதியில் வசித்து வந்தவர் சுபேதாபீவி (வயது 68). இவரது மகன் அப்துல் ரஹீம்(34). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

அப்துல் ரஹீம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 08.12.2020 அன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே ஆத்திரம் அடைந்த அப்துல் ரஹீம் தாயார் என்றும் பாராமல் சுபேதா பீவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹீமை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அப்துல் ரஹீம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story