சென்னை: மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.1.68 கோடி அபராதம் வசூல் - போக்குவரத்து காவல்துறை தகவல்
அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த அபராத தொகைகள் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் வசூலான அபராத தொகை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த அபராத தொகைகள் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 1,628 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாத 319 பேரின் அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fine worth over One Crore collected in
Drunken driving cases
Special drive conducted from 29.01.23 to 04.02.23.
843 violators paid the fine.
Rs.87,13,000/= fine amount collected.
In last two weeks, 1628 cases disposed and Rs.1.68 Crore fine amount collected. pic.twitter.com/wN3nr7VQgO