திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் - எடப்பாடி பழனிசாமி


திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் - எடப்பாடி பழனிசாமி
x

திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் பல்வேறு வீதிகளில் பள்ளம் தோண்டிவிட்டு பணிகளை தொடராதது வேதனைக்குரியது என்றும், திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "நிர்வாகத் திறமையற்ற ஒரு முதல் அமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பதை பலமுறை ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கையின் வாயிலாக நான் கூறியிருக்கிறேன். அது நிரூபணமாகியிருக்கிறது.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை மழைக்காலங்களிலே கனமழையின் போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இதையெல்லாம் சரியாக, முறையாக கடைபிடிக்காத காரணத்தினால் சென்னை மாநகரத்தில் பல்வேறு வீதிகளிலே பள்ளம் தோண்டிவிட்டு அந்தப் பணிகள் தொடராமல் இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.

இதைத் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்தில் அப்படிப்பட்ட செயல்பாடுகளை காண முடியவில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலையில்தான் இருக்கின்றார்களே ஒழிய திட்டமிட்டு பணிகள் செய்வதில்லை. இதனால் வருகின்ற பருவமழையின்போது, கனமழையின்போது சென்னை மாநகரம் நிச்சயமாக பாதிக்கக்கூடும்" என்று கூறினார்.


Next Story