#லைவ் அப்டேட்ஸ்; அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: திங்கள் கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைப்பு
பொதுக்குழுவை கூட்ட அதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை நேற்று சென்னை ஐகோர்ட் எழுப்பியிருந்தது.
Live Updates
- 8 July 2022 2:50 PM IST
அரசியல் கட்சி உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது" - எடப்பாடி பழனிசாமி தரப்பு
சென்னை,
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.அப்போது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சென்னை ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பதிலளிக்க உத்தரவிட்டது.
இதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுகவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் காரசார வாதங்கள் வருமாறு:-
*ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழு நோட்டீஸ் எத்தனை நாட்களுக்கு முன்பு கொடுக்க வேண்டும்? என பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி
"அரசியல் கட்சி உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது" - எடப்பாடி பழனிசாமி தரப்பு