சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கட்டடத்தின் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை,
சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட விபத்தில் தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியானது.
கட்டிட விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கட்டிட விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த விபத்தில் கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்படுத்தல், பொதுசொத்தை சேதப்படுத்தல், கட்டி மறுசீரமைக்கும் போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளீட்ட 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிலேனேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.