அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலை கண்டுபிடிப்பு
அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் சோழ வம்சத்தை சேர்ந்த 1,000 வருடத்திற்கும் மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள சிலை போலியானது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரத்திற்கு முன்பு மாயமான சென்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதை இந்தியாவுக்கு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story