மதுரையில் கண்மாயில் இருந்து வெளியேறும் ரசாயன நுரை - பெங்களூரு ஆராய்ச்சி குழுவினர் நேரில் ஆய்வு
ரசாயன நுரை சாலையில் பறப்பதை தடுப்பதற்காக வலை கொண்டு நுரையை மூடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரை,
மதுரை மாநகராட்சியில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாயில் தண்ணீருடன் கழிவு நீர் மற்றும் ரசாயன நீர் கலந்து வருவதால் வெள்ளை நிற ரசாயன நுரை உருவாகி சாலைகளில் பறந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே பொங்கி வரும் ரசாயன நுரை சாலையில் பறப்பதை தடுப்பதற்காக வலை கொண்டு நுரையை மூடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரசாயன நுரை குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து வந்த ஆராய்ச்சி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story