கெலவரப்பள்ளி அணையில் இருந்துவெளியேறும் ரசாயன நுரை


கெலவரப்பள்ளி அணையில் இருந்துவெளியேறும் ரசாயன நுரை
x

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, அங்குள்ள வர்தூர் ஏரி வழியாக பெங்களூரு பெருநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்தும், தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. நேற்றும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீர் துர்நாற்றம் வீசி குவியல் குவியலாக ரசாயன நுரை பொங்கி சென்றது. கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 410 கன அடி நீராகவே இருந்தாலும் நுரையின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வந்த நீரும், அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நாளுக்குநாள் அணைப்பகுதிகளில் அதிகரித்து வரும் ரசாயன நுரைகளால் ஓசூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story