செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த திங்கட்கிழமை அய்யனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை, மாலை இரண்டு வேளையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று (சனிக்கிழமை) 5-ம் நாள் படைத்தேர் திருவிழாவும், 7-ம் நாள் மாதிரி தேரோட்டமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) பெருந்தேரோட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story