சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா


சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
x

மெலட்டூர் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

மெலட்டூர் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விநாயகர் சதுர்த்தி விழா

பாபநாசம் அருகே மெலட்டூரில் சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியு உலா நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாண உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் வருகிற 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த திருக்கல்யாண உற்சவம். தமிழ்நாட்டிலேயே இங்கு தான் நடைபெறும். இந்த விழாவை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து, இந்த கோவிலில் தரிசனம் செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story