சோழப்பிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம்


சோழப்பிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம்
x

திருமயம் அருகே சோழப்பிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

சோழப்பிராட்டி அம்மன்

திருமயம் அருகே துளையானூரில் சோழப்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 9-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. நேற்று கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதனிடையே துளையானூரிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுகுடங்களுடன் தேருக்கு முன்னே செல்ல பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளின் வழியாக மேள தாளங்கள் முழங்க அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story