ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கூவம் திரிபுரசுந்தரியம்மன் கோவிலில் தேரோட்டம்


ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கூவம் திரிபுரசுந்தரியம்மன் கோவிலில் தேரோட்டம்
x

ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவையொட்டி கூவம் திரிபுரசுந்தரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி அம்மாள் சமேத திரிபுராந்தக கோவில். பழமை வாய்ந்த இந்த கோவிலில் சாமியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. இதன் காரணமாக இறைவனுக்கு தீண்டா திருமேனியர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதியன்று கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலை இரு வேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சூரிய பிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், மயில் வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், ராவண வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திரு வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசுந்தரி அம்மாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். மேளதாளம் முழுங்க அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் ஒவ்வொரு வீட்டிலும் அம்மனுக்கு கற்பூர ஆராதனை காண்பித்து வழிபட்டனர். வருகி்ற 22-ந்தேதி (சனிக்கிழமை) சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பி.ஜி. பிரபாகரன், கோவில் தக்கார் எம்.டில்லிபாபு முதலியார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறனர்.


Next Story