வெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா


வெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவிழந்தூர், பல்லவராயன் பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன் பேட்டையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 15- ந் தேதி இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடந்த 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அலமேலுமங்கைக்கும், சீனிவாசபெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வெண்ணெய்த்தாழியும், இரவு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷமிட்டப்படி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story