கூனக்காபாளையத்தில் இருசியம்மன் கோவிலில் தேர் திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


கூனக்காபாளையத்தில் இருசியம்மன் கோவிலில் தேர் திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x

கூனக்காபாளையத்தில் இருசியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஈரோடு

அம்மாபேட்டை

கூனக்காபாளையத்தில் இருசியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தேர் திருவிழா

பவானி அருகே ஒலகடம் கிராமம் கூனக்காபாளையத்தில் பழமையான பிரசித்தி பெற்ற இருசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனாவால் திருவிழா நடைபெறவில்லை.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இருசியம்மன், கருப்புசாமி, மகா முனியப்பன், பாட்டப்பன் ஆகிய 4 உற்சவர் சிலைகளும் தனித்தனியாக அலங்கார தேரில் அமர வைக்கப்பட்டது. பின்னர் கூனக்காபாளையம் மடப்பள்ளியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வெடிக்காரன்பாளையத்தில் உள்ள வனப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தோளில் சுமந்து தேரை எடுத்து வந்தனர்.

ஆடுகள் பலி கொடுத்தனர்

இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் சிலைகளை இறக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 300 ஆடுகள் பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து மடப்பள்ளிக்கு தேர் எடுத்து வரப்படுகிறது. பின்னர் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story