சாமுண்டீஸ்வரி கோவிலில் தேர் திருவிழா


சாமுண்டீஸ்வரி கோவிலில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தா்கள் வடம் பி்டித்து தேரை இழுத்தனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

சாமுண்டீஸ்வரி கோவில்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 16 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி சாகை வார்த்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வானவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றன. இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.

தேர் திருவிழா

விழாவின் 9-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக சென்று நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை மாயவன் வகையறா செய்தனர். விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story