கோதண்டராம சாமி கோவில் தேரோட்டம்
பூதிமுட்லுவில் கோதண்டராம சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில் கோதண்டராம கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கோதண்டராம சாமி மற்றும் சீதை அம்மாளுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோதண்டராம சாமி மற்றும் சீதை அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 150 அடி உயரமுள்ள தேரில் ஏற்றினர். பின்னர் அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் தேரின் மீது பூக்கள், அரிசி, நாணயங்கள் வீசி சாமி தரிசனம் செய்தனர். இதில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதி மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story