சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்


சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
x

சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோட்டம் குளித்தலை- பேட்டைவாயத்தலை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கீழ்கண்ட ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் - மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண் 16812) கரூர் வரை மட்டுமே செல்லும். அதே நேரம் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story