3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு


3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 18 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 20 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 16, 12 மற்றும் 8 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் வேகம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

ஆக்சலேட் அளவு அதிகரிப்பு

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வைக்கோல் மற்றும் பசுந்தீவனங்களான கம்பு, நேப்பியர் ஒட்டுபுல், சூப்பர் நேப்பியர், கம்பு, கொளுக்கட்டை, கினியா புல் மற்றும் சிறுதானிய பயிர்களில் ஆக்சலேட் அளவு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக இளம் வளரும் தீவன பயிர்களில் ஆக்சலேட் அளவு அதிகம் காணப்படும். அதேபோல் தண்டு பகுதியை விட இலைகளில் ஆக்சலேட்டின் அளவு அதிகம்.

தீவன பயிர்களின் அறுவடை கால இடைவெளி அதிகரிக்கும் போது, ஆக்சலேட்டின் அளவு குறைவதாக கண்டறியப்பட்டு, உள்ளது. ஆக்சலேட் அதிகம் உள்ள தீவனங்களை கால்நடைகள் நீண்ட நாட்களுக்கு உட்கொள்வதால், கால்சியம் சத்து பற்றாக்குறை மற்றும் சிறுநீரக பாதையில் கற்கள் உருவாகும். எனவே தற்போது நிலவும் மேகமூட்டத்துடன் கூடிய பருவமழை காலத்தில் தீவன பயிர்களுக்கு தேவைக்கு அதிகமாக யூரியா மற்றும் தொழுஉரம் இடுவதை தவிர்க்க வேண்டும். இளம் தீவன பயிர்களை அதிகஅளவு கால்நடைகளுக்கு கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story