தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு...!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளளது.
சென்னை,
"தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
17/12/2023: கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18/12/2023: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19/12/2023: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.