நாகநாதர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
நாகநாதர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் அமைந்துள்ள நாக நாதர் சவுந்தரநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் பஞ்ச மூர்த்திகள் என அழைக்கப்படும் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, நாகநாதர், சவுந்தரநாயகி அம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் தேரில் அமர்ந்து நயினார்கோவில் முழுவதும் வளம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமிக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொது மக்களின் சார்பில் நீர், மோர், சர்பத் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story