ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு ; வாலிபர் கைது


ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு ; வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 July 2023 1:51 AM IST (Updated: 2 July 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தவசுநகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மனைவி முத்துச்செல்வி (வயது 55). இவர் சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் முத்துச்செல்வி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென முத்துச்செல்வியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 45 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே முத்துச்செல்வி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவர் வாசுதேவநல்லூர் சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த ஜெயராம் மகன் பொன்ராஜ் (35) என்பதும், அவரது சொந்த ஊர் சிவகாசி சித்துராஜபுரம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 கிராம் சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story