பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
ஓசூரில் பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்
ஓசூரில் பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). சம்பவத்தன்று மாலை, இவர் பாகலூர் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் எதிரே மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென்று பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத பத்மாவதி அதிர்ச்சியில் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
போலீசார் வலைவீச்சு
இதனால் அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து பத்மாவதி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.