ஊட்டச்சத்து மாத விழாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு சான்றிதழ்
ஊட்டச்சத்து மாத விழாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. அதில் ரத்த சோகை, சிறு தானியங்களின் சிறப்புகள், தன் சுத்தம், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து கிராம வாரியாகவும், வட்டார வாரியாகவும், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் துண்டு பிரசுரம் மூலமாகவும், பிரசாரத்தின் மூலமாகவும், பயனாளிகளின் வீடுகளுக்கு சென்றும், பள்ளி, மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதிக அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை (நகர்புறம்) ஆகிய 3 வட்டாரங்களை சேர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கும், வட்டாரம் வாரியாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.