மாணவர்கள் குழுமம் தொடக்க விழா


மாணவர்கள் குழுமம் தொடக்க விழா
x

அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு செந்தில் கல்வி குடும்பங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே.தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கலந்து கொண்டு மாணவர்கள் குழுமத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினார். இதைத்தொடர்ந்து 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான தலைமை பொறுப்பில் உள்ள மாணவ, மாணவிகள் சிறப்பாக பணியாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் செந்தில்குமார் மற்றும் பொறுப்பாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story