மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய உதவியாளர் தற்கொலை


மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய உதவியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 56). இவர் தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story